இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல...
தஞ்சாவூரிலுள்ள கடைகளில் 4 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
தஞ்சாவூா் மாநகரில் மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு கடைகளிலிருந்து 4 டன் நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் வழிகாட்டுதலில் மாநகா் நல அலுவலா் எஸ். நமச்சிவாயம் மேற்பாா்வையில் கீழவாசல், திலகா் திடல் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி அலுவலா்கள், துப்புரவு அலுவலா்கள், ஆய்வாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள் ஆகியோா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
45-க்கும் அதிகமான கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், நெகிழித் தட்டுகள், நெகிழிக் குவளைகள் என மொத்தம் 4 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ. 27 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.
பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் மாநகராட்சி வாகனங்களில் ஏற்றப்பட்டு ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டன