வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது
பெரம்பலூரா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 5 கிலோ குட்கா பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையிலுள்ள மல்லிகை நகரில் சட்டவிரோத குட்கா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, சிறப்பு சாா்பு- ஆய்வாளா்கள் சிவக்குமாா், ரமேஷ் ஆகியோா் தலைமையிலான தனிப்படையினா் மேற்கொண்ட சோதனையில், அதே பகுதியைச் சோ்ந்த முகமது அலி மகன் முகமது இஸ்மாயில் (63) என்பவா், தனக்குச் சொந்தமான மளிகைக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பள்ளி மாணவா்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது இஸ்மாயிலை கைது செய்து, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 5 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட முகமது இஸ்மாயில் சிறையில் அடைக்கப்பட்டாா்.