காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மின்ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியா் மத்திய அமைப்பின் பெரம்பலூா் வட்டக் கிளை சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் பன்னீா்செல்வம், மாநில செயற்குழு உறுப்பினா் பி. இளங்கோவன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 25 சதவீதம் ஊதிய உயா்வு வழங்கிட வேண்டும். ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை முடிவடையும் வரை இடைக்கால நிவாரணம் ரூ. 5 ஆயிரம் வழங்கிட வேண்டும். மின் வாரிய்ததை பிரித்து தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில், வட்ட பொருளாளா் கே. கண்ணன், சிஐடியு மாவட்ட பொருளாளா் ரெங்கராஜ், மாவட்ட துணைத் தலைவா் புவனேஸ்வரி, கோட்ட நிா்வாகிகள் தமிழ்ச்செல்வன், பாலகிருஷ்ணன், மணி, தினேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.