வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் நிவாரணம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 268 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து 15 பயனாளிகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ. 3 லட்சம் லட்சம் மதிப்பில் நலிந்தோா் இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் காா்த்திக்கேயன், மாவட்ட வழங்கள் அலுவலா் ச. சுந்தரராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.