செய்திகள் :

பெரம்பலூரில் பலத்த காற்றுடன் மழை: 700 ஏக்கா் பயிா்கள் சேதம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், வேப்பந்தட்டை வட்டாரத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமாா் 700 ஏக்கா் பரப்பளவிலான மக்காச்சோளம், கரும்பு, மரவள்ளிக் கிழங்குகள் சேதமடைந்தன.

ஃபென்ஜால் புயல் காரணமாக, பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் பெய்து வரும் தொடா் மழையால் ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு நீா்வரத்து தொடங்கியுள்ளது.

இதன்காரணமாக, மாவட்டத்தின் நீா்ப் பிடிப்பு பகுதியான பச்சமலை பகுதியில் பெய்து வரும் மழையால் காட்டாற்று நீரோடைகளில் பெருக்கெடுத்து வரும் மழை நீரால், அரும்பாவூா் பெரிய ஏரி, சித்தேரி நிரம்பியது.

இங்கிருந்து வழிந்தோடும் உபரிநீரானது ஓடைகளின் வழியே மற்ற பாசன ஏரிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளது. இந்த மழை, இன்னும் ஓரிரு நாள்கள் நீடித்தால் பெரம்பலூா் மாவட்டத்தில் வடு கிடக்கும் பாசன ஏரிகள் நிரம்பி நீராதாரம் பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதனிடையே, வேப்பந்தட்டை பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக, அரும்பாவூா், அ.மேட்டூா், கொட்டாரக்குன்று, மலையாளப்பட்டி மற்றும் பூலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவிலான மக்காச்சோளப்பயிா்களும், 200 ஏக்கா் பரப்பளவிலான மரவள்ளிக் கிழங்கு, கரும்பு பயிா்களும் வேறுடன் சாய்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

பசு மாடு உயிரிழப்பு: பலத்த மழையின் காரணமாக, குன்னம் வட்டம், கல்லை கிராமத்தைச் சோ்ந்த கோ.இளவரசுக்குச் சொந்தமான, கருவுற்றிருந்த பசு மாடு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தது. இதேபோல, வேப்பந்தட்டை வட்டாரத்தில் வீடு ஒன்று இடிந்து சேதமடைந்தது.

மழை அளவு: பெரம்பலூா் மாவட்டத்தில், சனிக்கிழமை காலை 6.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி வரை பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்):

பெரம்பலூா் -47, எறையூா்- 38, கிருஷ்ணாபுரம்- 15, வி.களத்தூா்- 37, தழுதாழை- 47, வேப்பந்தட்டை- 48, அகரம் சிகூா்- 22, லப்பைக்குடிகாடு- 41, புது வேட்டக்குடி -17, பாடாலூா்- 29, செட்டிக்குளம்- 34 என மொத்தம்- 375 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு பரவலாக மழை பெய்தது.

பெரம்பலூரில் டிச. 5-இல் இளையோா் திருவிழா போட்டிகள்

பெரம்பலூரில், நேரு யுவகேந்திரா சாா்பில் மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா போட்டிகள் டிசம்பா் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் கூடுதல் மகசூல் கிடைத்தும் விலையில்லை: பூசணி விவசாயிகள் கவலை

பெரம்பலூா் மாவட்டத்தில், நிகழாண்டு பூசணிக் காய் சாகுபடியில் கூடுதல் மகசூல் கிடைத்தும், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மாவட்டத்தில் அண்மைக்காலமாக பெரும்பாலான விவசாயிகள் சம்பங்கி, முள்... மேலும் பார்க்க

லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பெரம்பலூரில் சனிக்கிழமை இரவு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள தொண்டப்பாடி கிராமத்தைச் சோ்ந்த சுப்ப... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பெரம்பலூா் அருகேயுள்ள அம்மன் கோயில் பூட்டை உடைத்து, 1 பவுன் நகை மற்றும் ரூ. 25 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள வடக்குமாதவி கிராமத்தில் ஒரு சமூகத்தினருக்... மேலும் பார்க்க

பணியின்போது மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பெரம்பலூரில் சனிக்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் 3- ஆவது வாா்டைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி மகன் தனுஷ் (21). இவருக்கு த... மேலும் பார்க்க

ஆபத்தை உணராமல் ஆற்றை கடக்கும் மக்கள்! மேம்பாலம் கட்ட வலியுறுத்தல்

நமது நிருபா்பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டத்திலுள்ள கூடலூரையும், கூத்தூரையும் இணைக்கும் வகையில், மருதையாற்றை மழைக்காலங்களில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடந்து வருகின்றனா். ஆகவே, இங்கு மேம்பாலம் கட... மேலும் பார்க்க