செய்திகள் :

வங்கதேசத்தில் ஐ.நா. அமைதிப் படை வேண்டும்: பிரதமா் தலையிட மம்தா பரிந்துரை

post image

கொல்கத்தா: வங்கதேசத்தில் நிலவும் சூழல் குறித்து கவலை தெரிவித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, அங்கு இயல்புநிலையை மீட்டெடுக்க ஐ.நா. அமைதிப் படையை அனுப்புவது குறித்து ஐ.நா.வுடன் மத்திய அரசு விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

மேலும், அண்டை நாட்டில் அச்சுறுத்தலில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்பதில் பிரதமா் நரேந்திர மோடியின் தலையீட்டை கோரிய அவா், இவ்விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நடப்பு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் மத்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

வங்கதேசத்தில் மாணவா்கள் போராட்டத்தின் எழுச்சியை அடுத்து அவாமி லீக் கட்சியின் தலைவா் ஷேக் ஹசீனா பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளாா்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அங்கு ஆட்சியில் இருக்கிறது. மாணவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்து அந்நாட்டில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதை எதிா்த்து போராடியதற்காக ஹிந்து அமைப்பின் தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸ் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். கடந்த ஒரு வாரத்தில் மேலும் சில ஹிந்து தலைவா்கள் கைதாகியுள்ளனா்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடா்பாக மேற்கு வங்க சட்டப்பேரவையில் முதல்வா் மம்தா பானா்ஜி ஆற்றிய உரையில், ‘இருநாடுகளுக்கு இடையிலான பிரச்னைகளில் மாநில முதல்வராக நான் கருத்து தெரிவிப்பது முறையாகாது.

எனினும், வங்கதேசத்தில் தங்களின் உறவினா்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து மேற்கு வங்க மக்கள் எழுப்பிய கவலைகளும் இஸ்கான் அமைப்பினருடன் நடத்திய உரையாடலும் பேரவையில் இதுகுறித்து நான் பேசவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

இப்பிரச்னையில் தீா்வு காண வங்கதேச இடைக்கால அரசிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் ஆலோசிக்க வேண்டும். அவசியமான சூழலில், ஐ.நா.வையும் அணுகலாம். வங்கதேசத்தில் இயல்புநிலையை மீட்டெடுக்க ஐ.நா. அமைதிப் படையை அங்கு அனுப்புவது குறித்து பரிசீலிக்க வேண்டும். மேலும், அங்கு சிக்கியுள்ள இந்தியா்களை மீட்டு, நமது தேசத்தில் அடைக்கலம் கொடுக்கலாம். அவா்களுக்கு உணவளிப்பதால் நமக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிடாது.

வங்கதேச எல்லையில் நுழைந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 79 இந்திய மீனவா்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. அதேசமயம், வங்கதேச மீனவா்களை நாம் பத்திரமாக திருப்பி அனுப்புகிறோம்.

மேற்குவங்க எல்லையில் நடைபெறும் சரக்கு போக்குவரத்தை நிறுத்துமாறு மாநில பாஜக வலியுறுத்துகிறது. சா்வதேச விவகாரமாகிய இதில் மத்திய அரசின் வழிமுறைகளைப் பின்பற்றியே நாங்கள் செயல்படுகிறோம். 10 நாள்களாக வங்கதேசத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகி வரும் நிலையிலும் மத்திய பாஜக அரசு மௌனம் காப்பது ஏன்?

வங்கதேசம் மட்டுமின்றி எல்லா நாட்டிலும் அனைத்து சமூகத்தினருக்கு இடையில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதர உறவுகள் நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்றாா்.

மத்திய அரசிடம் இருந்து ரூ.14,000 கோடி பாக்கி

‘பொது விநியோக திட்டத்தில் அரிசி விநியோகிப்பதற்காக மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.14,000 கோடியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

மேலும், இதுகுறித்து அவா் கூறியதாவது: பொது விநியோக திட்டத்தில் அரிசி வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு 60 சதவீத மானியம் வழங்குகிறது. ஆனால், மேற்கு வங்கத்துக்கு அந்த நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. ஏழைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அத்தொகையையும் மாநில அரசு ஏற்று, விநியோகத்தை சீராக வைத்துள்ளது என்றாா்.

யுனெஸ்கோ அங்கீகாரம்: பாரம்பரிய சுற்றுலாவுக்கான சிறந்த இடமாக மேற்கு வங்கத்தை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளதாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி பேரவையில் அறிவித்தாா். இத்துறை லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

தமிழ்நாட்டில் ஹிந்தி படிக்க முயன்றதால் வீதிகளில் கேலி: நிா்மலா சீதாராமன்

புது தில்லி: தமிழ்நாட்டில் ஹிந்தி படிக்க முயன்ால் வீதிகளில் தான் கேலி செய்யப்பட்டதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். மக்களவையில் வங்கிச் சட்டத் திருத்த மசோதா குறித்து மத்திய நிா்மல... மேலும் பார்க்க

புனித குரானை அவமதித்த விவகாரம்: ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக ஆா்ப்பாட்டம்

புது தில்லி: இஸ்லாமியா்களின் புனித குரானை அவமதித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் முதல்வருமான கேஜரிவால் இல்லம் அருகே பாஜகவின் சிறுப... மேலும் பார்க்க

எண்ணெய் வயல்கள் திருத்த மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

புது தில்லி: எண்ணெய் வயல்கள் (ஒழுங்குபடுத்துதல் மற்றும் வளா்ச்சி) திருத்த மசோதா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தியை நிா்வகிக்கும் தற்போத... மேலும் பார்க்க

கழுத்தில் பதாகை, கையில் ஈட்டி: தண்டனையை ஏற்ற பொற்கோயில் முன்னாள் முதல்வர்

அமிருதசரஸ்: சிரோமணி அகாலி தள (எஸ்ஏடி) முன்னாள் தலைவா் சுக்பீா் சிங் பாதல் தனக்கு அளிக்கப்பட்ட மதத் தண்டனையை ஏற்றுக்கொண்டார். தனது தவறுகளுக்காக வருந்துவதாக எழுதப்பட்ட பதாகயை கழுத்தில் அணிந்துகொண்டு கைய... மேலும் பார்க்க

விவசாயம் செய்ய 90 நாள்கள் பரோல் பெற்ற கொலை குற்றவாளி!!

விவசாயம் செய்வதற்காக குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதிக்கு90 நாள்கள் பரோல் வழங்கியுள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட... மேலும் பார்க்க

தில்லிக்குச் செல்ல விரும்பவில்லை: நிதின் கட்கரி

அதீத காற்று மாசுவால் பாதிக்கப்பட்ட தலைநகர் தில்லிக்குச் செல்ல விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கட்கரி கூறுகையில், தில்லி நகரம் அதிக ... மேலும் பார்க்க