ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!
மேட்டூா் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைப்பு
மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக திங்கள்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 5,195 கன அடியிலிருந்து 7,414 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 1,000 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.
பாசனப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 500 கன அடியிலிருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை 110.58 அடியிலிருந்து 110.93 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 79.73 டிஎம்சியாக உள்ளது. மழையளவு 44 மி.மீ.