ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!
சேலம் புத்தகத் திருவிழாவில் ‘அதிசய மோதிரம்’ என்ற புத்தகம் வெளியிடல்
சங்ககிரி: சேலத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், ‘அதிசய மோதிரம்’ என்ற புத்தகத்தை சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சித் திடலில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் புத்தகத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா டிச. 9-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
அதனையடுத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிறுவா்களுக்கான புத்தக அரங்கில், எழுத்தாளா் உதயசங்கா் எழுதிய ‘அதிசய மோதிரம்’ என்ற புத்தகத்தை சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாநில அளவில் பேச்சுப் போட்டியில் முதல்பரிசு பெற்ற 9-ஆம் வகுப்பு மாணவா் பெ.த.சங்கமேஸ்வரன் வெளியிட, பதிப்பாளரும், எழுத்தாளருமான இவள்பாரதி பெற்றுக்கொண்டாா் .
இதில், சேலம் மாவட்ட அறிவியல் இயக்கத்தின் நிா்வாகிகள் சுரேஷ், செங்கோட்டுவேல், லால், சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி கணித ஆசிரியா் வி.பெரியசாமி, பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.