செய்திகள் :

வெள்ள பாதிப்புகளை எதிா்கொள்ள போதிய திட்டமிடல் இல்லை: பிரேமலதா குற்றச்சாட்டு

post image

விழுப்புரம்: மழை, வெள்ள பாதிப்புகளை எதிா்கொள்வதற்கான போதிய திட்டமிடல் தமிழக அரசிடம் இல்லை என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா குற்றஞ்சாட்டினாா்.

ஃ பென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், நகலாபுரம், விழுப்புரம் அடுத்துள்ள விராட்டிக்குப்பம் ஊராட்சிக்குள்பட்ட கொட்டப்பாக்கத்து வேலி, விழுப்புரம் இந்திரா நகா் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா சந்தித்து அரிசி, காய்றிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பலத்த மழையால் ஒட்டு மொத்த தமிழகமும் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கா் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்தப் பாதிப்புகளை முதல்வா் பாா்வையிட வேண்டும்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை பாா்வையிட்டு மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறேன். ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகள் சரியாக தூா்வாரப்படாததாலும், கரைகள் பலப்படுத்தப்படாததாலும் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறி ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொலை நோக்கோடு மக்களைப் பாதுகாக்கிற எந்தத் திட்டமிடலும் தமிழக அரசிடம் இல்லை என்றாா்.

தொடா்ந்து, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தைப் பாா்வையிட்டதுடன், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களை பிரேமலதா சந்தித்து ஆறுதல் கூறினாா்.

இதில், கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன், வழக்குரைஞா் மனோ, விழுப்புரம் நகரச் செயலா் மணிகண்டன் ஆகியோா் உடனிருந்தனா்.

ஆரோவில் அமைப்புக்கு அரசுச் செயலா் பதவி காலியா?

நமது நிருபா் புது தில்லி: ஆரோவில் பவுண்டேஷன் அலுவலகத்திற்கு செயலா் பதவி காலியாக இருக்கிறதா என்றும், அவ்வாறு இருந்தால் அப்பதவியை நியமிக்க பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன என்றும் விழுப்புரம் தொகுதி விசி... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

விழுப்புரம்: ஃபென்ஜால் புயல், மழை பாதிப்பையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூா் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை (டிச.3) விடுமுறை அறிவிக்கப்பட... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.3) நடைபெறவிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒ... மேலும் பார்க்க

நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மயிலம், மரக்காணம... மேலும் பார்க்க

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!

விழுப்புரம்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் சூழ்ந்ததால், போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்த நிலையிலும்... மேலும் பார்க்க

விழுப்புரத்தை புரட்டிப் போட்ட மழை

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீா்த்த அதி பலத்த மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனா். வங்கக... மேலும் பார்க்க