செய்திகள் :

திருச்சி சூர்யாவுக்கு லீகல் நோட்டீஸ் -ரூ.1கோடி இழப்பீடு கேட்ட பாஜக இராம ஸ்ரீநிவாசன்... காரணம் என்ன?

post image

பாஜக-விலிருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும் பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக-வில் திருச்சி சிவா மகன் சூர்யா சிவா

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகனான சூர்யா கடந்த 2022-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்டதால் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர், பின்பு 2023-ல் கட்சியில் இணைக்கப்பட்டு இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டவர் மீண்டும் சில புகார்களால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைத்து பொறுப்புகளிருந்தும் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பாஜக முக்கிய நிர்வாகிகளை சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் பாஜக பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் குறித்து விமர்சித்து பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்துதான் இராம ஸ்ரீனிவாசன் ஒரு கோடி ரூபாய் கேட்டு சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

திருச்சி சூர்யா - இராம ஸ்ரீநிவாசன்

வழக்கறிஞர் லட்சுமணன் அனுப்பியுள்ள நோட்டீசில் "எனது கட்சிக்காரர் முனவைர் பட்டம் பெற்று பல்கலைக்கழக பேராசிரியராக நற்பெயருடன் பணியாற்றி பின்பு, பாஜகவில் பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டு, பின்பு பாஜகவின் கோட்ட பொறுப்பாளராக பதவி பெற்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றதால் அவரது உழைப்பையும் செயல்திறனையும் பரிசீலனை செய்து அவரை பொதுச்செயலாளர் பதவியில் நியமித்தார்கள். கட்சி கொள்கைகளின் அடிப்படையில் பல கருத்துகளை தொலைக்காட்சியிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டதன் காரணமாக மாநில மற்றும் தேசிய அளவில் பிரபலம் அடைந்தார். நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பல சவால்களை சந்தித்து மதுரையில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றதை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அவர் மீது பல பொய்யான அபாண்டமான பழிகளை சுமத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தாங்கள் (திருச்சி சூர்யா) பாஜகவில் பொறுப்பாளராக இருந்து அதன் பின்பு கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டீர்கள். அதிலிருந்து பாஜக பொறுப்பாளர்கள் மீது வன்மம் கொண்டு தங்கள் சுயநலத்திற்காக தேவையற்ற பொய்யான புகார்களை வீணாக பரப்பி எனது கட்சிக்காரரின் நற்பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுவதற்கு நீங்கள் ஏற்கெனவே பல முயற்சிகள் செய்தும் அதை என் கட்சிக்காரர் அதை பெருந்தன்மையாக விட்டுகொடுத்தார். ஆனாலும் தாங்கள் என் கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறீர்கள்.

இராம ஸ்ரீநிவாசன்

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முகநூலில் என் கட்சிக்காரர் குறித்து பொய்யான, அபாண்டமான, உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்டுள்ளீர்கள். என் கட்சிக்காரை வேண்டுமென்றே எந்த முகாந்திரமும் இல்லாமல் அவமானப்படுத்தியது மட்டுமின்றி இராம ஸ்ரீநிவாசன் என்ற அவர் பெயரையும் அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளீர்கள். முகாந்திரமில்லாத குற்றச்சாட்டுகளை தீய எண்ணத்துடன் அவர் மீது சுமத்தியது மட்டுமின்றி மாநிலத் தலைவர் அண்ணாமலையையும், பாஜகவையும் களங்கப்படுத்தியுள்ள நீங்கள் 15 நாள்களுக்குள் சமூக வலைதளம் மூலம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காத பட்சத்தில் உங்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் குற்றவியல் சட்டப் பிரிவுகளின்படி வழக்குத் தொடரப்படும். என் கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த கெட்ட எண்ணத்தில் செயல்பட்ட நீங்கள் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று வழக்கறிஞர் நோட்டீசில் தெரிவிக்கப்படுள்ளது.

இதற்கு திருச்சி சூர்யா எந்த பதிலும் இதுவரை அளிக்கவில்லை.

பஞ்சாப்: மத தண்டனைக்குள்ளான முன்னாள் துணை முதல்வர்; துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பியது எப்படி?

பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்று சிரோமணி அகாலி தளம். இந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுக்பீர் சிங் பாதல். 2007 - 2017-வரை சிரோமணி அகாலி தளம் கட்சி, பஞ்சாபில் ஆட்சியில் இருந்தது. ... மேலும் பார்க்க

Railway union election: `என் நிர்வாகிகள் தவறாக நடந்திருந்தால் மறந்துடுங்க!' - SRMU கண்ணையா

ரயில்வேயில் தொழிற்சங்கங்கங்களை அங்கீகரிப்பதற்கான தேர்தல் நாடு முழுக்க இன்றும் நாளையும் நடக்கிறது.ஆறு வருடத்துக்கொரு முறை நடக்க வேண்டிய இந்தத் தேர்தல் 2019-லேயே நடந்திருக்க வேண்டியது. ரயில்வே நிர்வாகம்... மேலும் பார்க்க

Ponmudi: சேறு வீசப்பட்டதன் பின்னணி என்ன..? - அமைச்சர் பொன்முடி சொன்ன விளக்கம்!

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், கடந்த 30 ஆம் தேதி புதுச்சேரிக்கு அருகே விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது. இதனால் விழுப்புரம் மாவட்டம், கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 10-க்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: மெனோபாஸில் கொத்துக்கொத்தாக உதிரும் முடி... கட்டுப்படுத்த என்னதான் வழி?

Doctor Vikatan: என்வயது 47. குறிப்பாக மெனோபாஸ் அறிகுறிகள் ஆரம்பித்துவிட்டன. தலைமுடி உதிர்வு மிக அதிகமாக இருக்கிறது. தலையை சீவினாலேகொத்துக் கொத்தாக முடி கொட்டுகிறது. இப்படியே போனால், தலையில் பாதிக்கும்... மேலும் பார்க்க

Vijay: ``காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடி...'' - திமுகவைத் தாக்கிய விஜய்!

ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன வட தமிழக மாவட்டங்கள். திமுக அரசு மீது மக்களும், எதிர்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவரும் சூழலில் தவெக தலைவர் விஜய், அரசை... மேலும் பார்க்க

Thiruvannamalai Fengal Cyclone Latest Update : பாறைகளில் சிக்கிய உடல்கள், 48 மணி நேர போராட்டம்

சபர்மதி ரிப்போர்ட் படத்தைப் பார்த்த பிரதமர் மோடி!* விக்ராந்த் மாஸ்ஸி: 12வது தோல்வியின் நடிகர் ஏன் படங்களில் இருந்து விலகி இருக்கிறார்?* நிதின் கட்கரி: "அரசியல் அதிருப்தி உள்ளங்களால் நிரம்பியுள்ளது..."... மேலும் பார்க்க