செய்திகள் :

Doctor Vikatan: மெனோபாஸில் கொத்துக்கொத்தாக உதிரும் முடி... கட்டுப்படுத்த என்னதான் வழி?

post image

Doctor Vikatan: என் வயது 47. குறிப்பாக மெனோபாஸ் அறிகுறிகள் ஆரம்பித்துவிட்டன. தலைமுடி உதிர்வு மிக அதிகமாக இருக்கிறது. தலையை சீவினாலே கொத்துக் கொத்தாக முடி கொட்டுகிறது. இப்படியே போனால், தலையில் பாதிக்கும் மேல் வழுக்கையாகி விடுமோ என பயமாக இருக்கிறது. முடி உதிர்வைக் கட்டுப்படுத்த ஏதேனும் தீர்வுகள் இருந்தால் சொல்லுங்கள்.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ்.

ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ்.

மெனோபாஸ் காலத்தில் ஏற்படுகிற ஹார்மோன் சமநிலையின்மையை குணமாக்க வைட்டமின் தெரபி மிக முக்கியம்.  குறிப்பாக பி வைட்டமின் மிக முக்கியம். அதிலும்  வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் ஆசிட் இரண்டும் மிக மிக முக்கியம். இவற்றை மாத்திரை வடிவிலோ, உணவுகளின் மூலமோ எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்து வைட்டமின் டி சத்து குறைந்தாலும் முடி உதிர்வு, முடி மெலிதல் போன்றவை இருக்கலாம்.  வயதாக, ஆக நம் உடலில் கொலாஜென் உற்பத்தியும் குறையத் தொடங்கும்.  அதன் விளைவாலும் முடி வறண்டு, உயிரே இல்லாதது போல மாறும். போதிய அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் முடி உதிர்வு இருக்கும்.  வைட்டமின் பி குடும்பத்தைச் சேர்ந்த பயோட்டின் சத்தும் முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் மிக முக்கியம்.

அசைவம் சாப்பிடுவோர் என்றால், தினமும் ஒரு முழு முட்டை எடுத்துக்கொள்ளலாம். சைவ உணவுக்காரர்கள் என்றால், முளை கட்டிய பயறு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.  தேவைப்பட்டால் புரோட்டீன் சப்ளிமென்ட்ஸும் எடுத்துக்கொள்ளலாம்.  முடியின் ஆரோக்கியத்துக்கு கறிவேப்பிலை மிகப் பிரமாதமாக உதவும். கறிவேப்பிலையை சட்னியாக செய்து தினமும் சேர்த்துக்கொள்ளலாம். பத்து- பதினைந்து கறிவேப்பிலைகளை மோருடன் சேர்த்து அடித்தும் குடிக்கலாம். பொடியாக அரைத்து சாதத்தில் நெய் விட்டுப் பிசைந்தோ, இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொண்டோ சாப்பிடலாம்.

Curry Leaves / கறிவேப்பிலை

இளநரையைத் தவிர்ப்பது, முடி வளர்ச்சிக்கு உதவுவது என நெல்லிக்காயும் கூந்தலுக்கு நல்லது. தினமும் 2 நெல்லிக்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்கலாம். அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம். பொரியல், கூட்டு, சூப் என ஏதேனும் ஒரு வடிவில் தினமும் ஒரு கீரை சேர்த்துக்கொள்ளலாம்.  ஒருநாள் விட்டு ஒரு நாள் வெங்காய சூப் குடிக்கலாம். அது பிடிக்காதவர்கள்,  பரங்கிக்காய் சூப், வெங்காயம்- தக்காளி சூப் குடிக்கலாம். கேரட்- வெங்காயம் சூப்பும் குடிக்கலாம்.

மெனோபாஸ் காலத்தை எட்டிய பெண்கள், ஈவ்னிங் ப்ரிம்ரோஸ் ஆயில் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம். இது முடி உதிர்வுக்கு மட்டுமன்றி, மெனோபாஸ் காலத்தில் வரும் ஹாட் ஃபிளாஷஸ், உடல் வலி, மனநிலையில் ஏற்படும் தடுமாற்றங்கள்,  சரும வறட்சி போன்றவற்றையும் குணப்படுத்தும்.  உங்கள் மருத்துவரின் ஆலோசனையோடு இதை எடுத்துக்கொள்ளலாம்.  இரும்புச்சத்து, வைட்டமின் பி 12, வைட்டமின் டி ஆகியவற்றின் அளவுகளைப் பரிசோதிக்கும்  ரத்தப் பரிசோதனை செய்து பாருங்கள். அவற்றில் குறைபாடு இருந்தால் மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட் எடுக்க வேண்டியிருக்கும். தினமும் 3-4 பேரீச்சம்பழங்களும், 2 அத்திப்பழங்களும் எடுத்துக்கொள்வது இரும்புச்சத்துக் குறைபாட்டை சரியாக்கி, முடி உதிர்வை நிறுத்தும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

சந்திரபாபு நாயுடு வழக்கை விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தப்பட்ட ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்த 6 மாதங்களில், முன்பு சந்திரபாபு நாயுடு தொடர்பான வழக்கை விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட... மேலும் பார்க்க

South Korea: `நேற்று ராணுவ ஆட்சி அமல்... இன்று வாபஸ்' - என்ன நடக்கிறது தென் கொரியாவில்?!

'இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர், ரஷ்ய - உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி... என ஏற்கெனவே பரபரப்பாக இருக்கும் உலக அரசியல் களத்தை இன்னும் பரப்பாக்கியது, தென் கொரியாவின் 'ராணுவ ஆட்சி அமல்' அறிவிப்ப... மேலும் பார்க்க

UP: ``என் கடமையை தடுக்கின்றனர்'' - தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தி என்ன சொல்கிறார்?

ஹாஜி ஜாமா பள்ளிவாசல் வழக்கைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் மாநிலம் சம்பால் பகுதியில் வன்முறை எழுந்தது. காவல்துறையினர் மற்றும் பள்ளிவாசலில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த குழுக்கள் இடையி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா முதல்வராகும் தேவேந்திர பட்னாவிஸ்... முடிவுக்கு வந்த இழுபறி..!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலையில் மந்த்ராலயாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் நிர்மலா சீ... மேலும் பார்க்க

பஞ்சாப்: மத தண்டனைக்குள்ளான முன்னாள் துணை முதல்வர்; துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பியது எப்படி?

பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்று சிரோமணி அகாலி தளம். இந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுக்பீர் சிங் பாதல். 2007 - 2017-வரை சிரோமணி அகாலி தளம் கட்சி, பஞ்சாபில் ஆட்சியில் இருந்தது. ... மேலும் பார்க்க

Railway union election: `என் நிர்வாகிகள் தவறாக நடந்திருந்தால் மறந்துடுங்க!' - SRMU கண்ணையா

ரயில்வேயில் தொழிற்சங்கங்கங்களை அங்கீகரிப்பதற்கான தேர்தல் நாடு முழுக்க இன்றும் நாளையும் நடக்கிறது.ஆறு வருடத்துக்கொரு முறை நடக்க வேண்டிய இந்தத் தேர்தல் 2019-லேயே நடந்திருக்க வேண்டியது. ரயில்வே நிர்வாகம்... மேலும் பார்க்க