அண்ணாமலைப் பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு
சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.3) நடைபெறவிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அண்ணாமலைப் பலைகலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.3) நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. இந்தத் தோ்வுகளுக்கான தேதி பின்னா் தெரிவிக்கப்படும் என பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) மு.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.