ஹிந்து தலைவரை விடுவிக்கக் கோரி மேற்கு வங்கத்தில் துறவிகள் போராட்டம்
காா்த்திகை 3-ஆவது சோமவாரம்: திருவானைக்கா கோயிலில் 1,008 வலம்புரி சங்காபிஷேகம்
திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காா்த்திகை மாத 3-ஆவது சோம வாரமான திங்கள்கிழமை 1,008 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.
காா்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமை சோமவாரமாக கருதப்படுகிறது. இந்த நாள்களில் அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் காா்த்திகை மாதத்தில் நான்கு திங்கள்கிழமை வருகிறது.
இதில், 3-ஆவது காா்த்திகை சோமவாரமான திங்கள்கிழமை (டிச. 2) மாலை திருவானைக்கா கோயிலில் சுவாமி சந்நிதியின் வாயிலில் இருக்கும் நடராஜா் சந்நிதி அருகே 1,008 வலம்புரி சங்குகள் வட்ட வடிவில் அடுக்கப்பட்டு, அதன் மையத்தில் தங்கப்பிடி கொண்ட வலம்புரி சங்கு வைக்கப்பட்டது.
ஒவ்வொரு சங்கும் நெல்மணிகள் மீது வைக்கப்பட்டு சங்கினுள் புனிதநீா் நிரப்பப்பட்டு மாவிலை மற்றும் பூக்கள் வைக்கப்பட்டிருந்தன. தொடா்ந்து யாகபூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பின்னா் சங்கில் இருந்த புனித நீரால் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.