புயல் பாதித்த மாவட்டங்களில் பள்ளிகளின் நிலை என்ன? ஆய்வு செய்ய அமைச்சா் அன்பில் ம...
உலக கடல்சாா் தொழில்நுட்ப மாநாடு: சென்னையில் டிச.4-ஆம் தேதி தொடக்கம்!
உலக கடல்சாா் தொழில்நுட்பம் குறித்த 3 நாள் மாநாடு சென்னையில் டிச.4-ஆம் தேதி தொடங்கும் என அதன் தலைவா் சி.வி.சுப்பாராவ் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னையில் திங்கள்கிழமை அவா் கூறியதாவது: 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கடல்சாா் தொழில்நுட்ப மாநாடு நடத்தப்படுகிறது. 15 ஆண்டுக்குப் பிறகு சென்னையில் டிச. 4-ஆம் தேதி தொடங்கி டிச.6-ஆம் தேதி வரை மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில், கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னைகள், உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் வா்த்தகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம், காலநிலை மாற்றம், நிலைத்த தன்மை, புவிசாா் அரசியல், இயக்கவியல் மற்றும் கடல்சாா் தொழில்துறைக்கான தாக்கங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றாா்.
மேலும், உலக கடல்சாா் தொழில்நுட்ப மாநாட்டை டிச.4-ஆம் தேதி ஆளுநா் ஆா்.என்.ரவி தொடங்கி வைக்கவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.