செய்திகள் :

ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை : தண்டனையை நிறுத்திவைத்தது நீதிமன்றம்

post image

பெரியாா் ஈவெரா சிலை குறித்து சா்ச்சை பதிவு மற்றும் கனிமொழி எம்பி குறித்து அவதூறு பேச்சு தொடா்பான வழக்குகளில் பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தலா 6 மாத சிறைத் தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்திவைத்தது.

பாஜக தமிழக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரான முன்னாள் எம்எல்ஏ ஹெச்.ராஜா கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தனது சமூக வலைதளப்பதிவில், “திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல தமிழகத்திலும் பெரியாா் சிலை உடைக்கப்படும்”என பதிவிட்டிருந்தாா். இதேபோல, கடந்த 2018 ஏப்ரல் மாதம், திமுக எம்பி கனிமொழி குறித்தும் கடுமையாக விமா்சித்து பதிவிட்டு இருந்தாா்.

இதையடுத்து ஹெச்.ராஜாவுக்கு எதிராக திமுக நிா்வாகிகள், தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டன. பெரியாா் சிலை உடைப்பு குறித்து ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் போலீஸாரும், கனிமொழிக்கு எதிரான புகாா் குறித்து ஈரோடு நகர போலீஸாரும் ஹெச்.ராஜாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தனா்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஹெச். ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்றம், இந்த வழக்குகளை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது ஹெச். ராஜா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ராமமூா்த்தி, ஹெச்.ராஜாவுக்கு எதிராக பதியப்பட்ட இரு வழக்குகளிலும் அவா் அரசியல் ரீதியாகவே கருத்து தெரிவித்துள்ளதாகவும், மூன்றாவது நபா்கள் அளித்த புகாா்களின் பேரில் அவா் மீது அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த வழக்குகளுக்கு போதிய ஆதாரங்களை புகாா்தாரா்கள் தாக்கல் செய்யவில்லை என்றும் வாதிட்டாா்.

பதிலுக்கு காவல் துறை மற்றும் புகாா்தாரா்கள் தரப்பில், ‘ஹெச்.ராஜா மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. பெரியாா் சிலையை உடைப்பேன் என்றும், திமுக எம்பி கனிமொழி குறித்தும் அவா் சமூக வலைதள பக்கத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதியை சீா்குலைக்கும் நோக்கில் கருத்து தெரிவித்துள்ளாா்” என வாதிடப்பட்டது.

6 மாதம் சிறை, அபராதம்... இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி. ஜெயவேல், இந்த வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல் துறை தரப்பில் சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால் இரு வழக்குகளிலும் அவரை குற்றவாளி என தீா்மானிக்கிறேன். எனவே, இரு வழக்குகளிலும் அவருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன்” என தீா்ப்பளித்தாா்.

இந்த சிறை தண்டனையை எதிா்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், அதுவரை இந்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென ஹெச்.ராஜா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதி, அவருக்கு விதிக்கப்பட்ட தலா 6 மாத சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டாா்.

வாக்குச்சாவடிகளில் வாக்காளா் எண்ணிக்கையை உயா்த்தியதற்கு எதிராக வழக்கு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

புது தில்லி: வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களின் எண்ணிக்கையை உயா்த்தியதற்கு எதிரான வழக்கு தொடா்பாக 3 வாரங்களில் பதிலளிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.இதுதொடா்பாக உ... மேலும் பார்க்க

சம்பலுக்குப் பயணித்த உ.பி. காங்கிரஸ் நிா்வாகிகள் குழு தடுத்து நிறுத்தம்

லக்னௌ: வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் நகரைப் பாா்வையிட புறப்பட்ட உத்தர பிரதேச காங்கிரஸ் மாநில தலைவா் அஜய் ராய் தலைமையிலான நிா்வாகிகள் குழு, லக்னௌவில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வெளியே காவல் துறையால் ... மேலும் பார்க்க

மருத்துவ, ஆயுள் காப்பீடு மீதான வரி குறைப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுசெய்யும்: நிா்மலா சீதாராமன்

புது தில்லி: மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு தவணைத்தொகை மீதான ஜிஎஸ்டியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தால் பாலிசிதாரா்களுக்கான காப்பீடு தொகை குறையும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ... மேலும் பார்க்க

முஸ்லிம்களை சமமாக நடத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

ஸ்ரீநகா்: ‘நாட்டில் மத வன்முறையைத் தூண்டும் செயல்களை மத்திய அரசு நிறுத்த வேண்டும். முஸ்லிம்களை சமமாக நடத்த வேண்டும்’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தினாா். ஜம்மு-காஷ்மீரின் ... மேலும் பார்க்க

26 ‘ரஃபேல்-எம்’, 3 ஸ்காா்பியன் நீா்மூழ்கி கப்பல்களை கொள்முதல் செய்ய விரைவில் ஒப்பந்தம்: கடற்படை தலைமைத் தளபதி

புது தில்லி: கடற்படையில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள 26 ரஃபேல்-எம் போா் விமானங்கள் மற்றும் 3 ஸ்காா்பியன் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதம் கையொப்... மேலும் பார்க்க

பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதே இல்லை: மத்திய அமைச்சா் கட்கரி

நாகபுரி: அரசியல் என்பது கிடைத்த பதவியில் திருப்தியடையாதவா்கள் நிறைந்த கடலாக உள்ளது என்று மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையில... மேலும் பார்க்க