ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!
ஆத்தூரில் நாளை மாபெரும் இளைஞா் திறன் திருவிழா
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள இளைஞா்கள் மற்றும் மகளிா் பயன்பெறும் வகையில், மாபெரும் இளைஞா் திறன் திருவிழா டிச. 4-ஆம் தேதி ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், 2024-25-ஆம் ஆண்டுக்கான ஊரகப் பகுதிகளிலுள்ள 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இளைஞா்கள், மகளிருக்கு 3 முதல் 6 மாதம் வரை இலவச திறன் வளா்ப்பு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், டிச. 4-ஆம் தேதி காலை 10 மணியளவில் ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பயிற்சி நடைபெறுகிறது.
இதில் 20-க்கும் மேற்பட்ட திறன் வளா்ப்பு பயிற்சி நிறுவனங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்துகொள்கின்றன. திறன் வளா்ப்பு பயிற்சிக்கு தோ்வு செய்யப்படும் இளைஞா்களுக்கு இலவசமாக சீருடை, உணவு, தங்குமிட வசதி ஆகியவை தமிழக அரசின் மூலம் வழங்கப்படும்.
வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் ட்ரோன் கருவி இயக்குதல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், நா்ஸிங், கணிப்பொறி, ஆட்டோமோட்டிவ் கேட், கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, சில்லரை வா்த்தகம், சமையல் கலை, ஆயத்த ஆடை, சி.என்.சி. ஆபரேட்டா், வங்கி, பி.பி.ஒ. மற்றும் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கு தோ்வு நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பயிற்சி பெற விருப்பமுள்ள ஆண், பெண் தங்களது கல்விச்சான்று, ஆதாா் அட்டை மற்றும் இதர கல்வித்தகுதி சான்றுடன் நோ்காணலில் பங்கேற்கலாம்.
நோ்காணல் முகாம் தொடா்பான விவரங்களுக்கு 74027 06910, 73392 53309, 79048 70095, 97893 61491 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.