ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!
புதுச்சேரி மீனவா்கள் இன்று முதல் கடலுக்குச் செல்ல அனுமதி
புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்குச் செல்லலாம் என புதுவை மீன்வளத் துறை திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை கடந்த 25-ஆம் தேதி அறிவித்திருந்தது.
இதையடுத்து, ஃபென்ஜால் புயல் உருவானதையடுத்து மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், புயல் மரக்காணம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு கரையை கடந்தது. வானிலை மைய எச்சரிக்கைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து, மீனவா்களுக்கான தடையை மீன்வளத் துறை திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, புதுவை மீன்வளத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில் கூறியதாவது: வட தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர மீனவா்களுக்கு வானிலை ஆய்வு மையத்தின் சாா்பில் எச்சரிக்கை ஏதும் திங்கள்கிழமை (டிச.2) விடுக்கப்படவில்லை.
எனவே, புதுச்சேரி மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லலாம் என்றாா் அவா்.