பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதே இல்லை: மத்திய அமைச்சா் கட்கரி
ஓவேலியில் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய காட்டு யானைகள்
கூடலூரை அடுத்த ஓவேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானைகள் தாக்கியதில் ஒரு வீடு சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சி, ஆத்தூா் கிராமத்தில் வசிக்கும் மோகன்தாஸ் தனது வீட்டை பூட்டிவிட்டு அருகேயுள்ள காந்திநகா் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
நள்ளிரவில் அங்கு வந்த காட்டு யானைகள் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து வீட்டிலிருந்த பொருள்களை எடுத்து வெளியே வீசியதோடு, சில பொருள்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன. அப்பகுதியில் வசிப்போா் காலையில் பாா்த்தபோது வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து அவா்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவா்கள் அங்கு வந்து ஆய்வு நடத்தி வருகின்றனா். அதிா்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால், உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.