மதுரையில் ரத்தம் சொட்ட சொட்ட மாணவரை தாக்கிய சக மாணவர்கள்: அச்சத்தில் மக்கள்
கதாபாத்திரங்களுக்கு உயிர்க்கொடுப்பவர் ரன்பீர்..! சீரியலில் ராமனாக அசத்தியவர் பாராட்டு!
தொலைக் காட்சி தொடராக 2008இல் வெளியான ராமாயணம் சீரியலில் நாயகன் ராமன் ஆக நடித்தவர் நடிகர் குர்மீட் சௌதரி. இதை ராமானந்த் சாகர் இயக்கியிருந்தார்.
300 எபிசோடுகள் வெளியான இந்தத் தொடர் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது ராமாயணம் படத்தில் ராமனாக ரன்பீர் நடிக்கிறார். இந்தப் படத்தை நிதீஷ் திவாரி இயக்குகிறார். இதில் சீதையாக சாய் பல்லவியும் ராவணனாக யஷ் நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் ஆஸ்கர் விருது 2 இசையமைப்பாளர் இணைய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
கதாபாத்திரங்களுக்கும் உயிர்க்கொடுக்கும் ரன்பீர்
இந்த நிலையில் குர்மீட் சௌதரி ராமாயணம் படம் குறித்து கூறியதாவது:
ரன்பீர் மிகச்சிறப்பான நடிகர். தான் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உயிர்க்கொடுப்பவர். கடவுள் ராமன் கதாபாத்திரத்தின் சாரம்சம் எனக்குள் இருந்ததால் மக்களின் அன்பு என்க்கு கிடைத்தது.
ரன்பீர் கபூரும் இந்தக் கதாபாத்துரத்துக்கு நியாயம் சேர்ப்பாரென நம்பிக்கை இருக்கிறது.
நான் 23 வயதில் ராமாயணத் தொடரில் நடித்தேன். நான் இதற்கு முன்பு மக்களுக்கு பழக்கப்படாத முகமாக இருந்தேன். அதுவரை மீடியாவில் நடிக்காமல் இருந்தேன்.
ராமானந்த் சாகர் இதைத்தான் விரும்பினார். புனிதமான கதாபாத்திரத்தில் நடிக்கும்போது நடிகருக்கு எந்தவிதமான பின்னணியும் மக்களிடம் எந்த விதமான பெயரும் இருந்தால் மக்களால் அதை எளிதாக புனிதமான கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்துவிடுவார்கள் என்றார்.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் அனிமல் படத்தில் சிறப்பாக நடித்து கவனம் பெற்றார். உலகளவில் ரூ.900 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.
தற்போது, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் அண்ட் வார் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
குர்மீட் சௌதரி ஏக் காலி காலி அன்கெய்ன் சீசன் 2 தொடருக்காக 10 கிலோ எடையைக் குறைத்துள்ளார். அதற்கான கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.