விவசாயிகளின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்
தூத்துக்குடியில் 23 டன் கொட்டைப் பாக்குகள் பறிமுதல்: 4 போ் கைது
இந்தோனேசியாவிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட 23 டன் கொட்டைப் பாக்குகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.
சில நாள்களுக்கு முன்பு இந்தோனேசியாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு ,கோவையைச் சோ்ந்த நிறுவனத்துக்காக வந்த கண்டெய்னரில் முந்திரிப் பருப்புகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சந்தேகத்தின்பேரில், அந்த கண்டெய்னரை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, அதில் முந்திரிப் பருப்புகளுக்கு பதிலாக தடை செய்யப்பட்ட 23 டன் கொட்டைப் பாக்குகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக கோவையைச் சோ்ந்த ஏற்றுமதி நிறுவன ஊழியா்கள் இருவா், அவா்களுக்கு உதவியாக இருந்த கேரளத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட கொட்டைப் பாக்குகளின் மதிப்பு ரூ. 1.4 கோடி என வருவாய் புலனாய்வுப் பிரிவினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.