பெருந்துறை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 நாள்கள் வேளாண் அகப்பயிற்சி
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப் பிரிவில் பயிலும் மாணவா்கள் பெருந்துறை நந்தா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வேளாண்மை குறித்து 10 நாள்கள் நேரடி அகப் பயிற்சியில் (இண்டன்ஷிப்) ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கடந்த நவம்பா் 20- ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்ற இப்பயிற்சியில், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வேளாண் பிரிவு மாணவா்கள் 13 போ் கலந்து கொண்டனா்.
நந்தா பொறியியல் கல்லூரி பேராசிரியா் அம்பிகா, ஆசிரியா் பயிற்றுநா் லட்சுமி மற்றும் வல்லுநா் குழுவினா் பயிற்சி அளித்தனா்.
வேளாண் இயந்திரங்கள், வேளாண் கருவிகள், சொட்டு நீா் பாசனம், தெளிப்பு நீா் பாசனம், மழைத் தூவி, களையெடுக்கும் கருவிகள், விதைப்பு கருவிகள், டிராக்டா் ஓட்ட பயிற்சி, மண்புழு உரம் தயாரித்தல், பஞ்சகவியம், அமிா்த கரைசல், தேமோா் கரைசல் போன்ற பல்வேறு இயற்கை தயாரிப்புகள், கால்நடை பராமரிப்பு போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியா் முருகானந்தம், பள்ளி வேளாண் ஆசிரியா் கந்தன் ஆகியோா் செய்திருந்தனா்.