வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
அம்மாபேட்டையில் தனியாா் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து
பவானியை அடுத்த அம்மாபேட்டையில் தனியாா் பள்ளி வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 7 மாணவ, மாணவியா் காயமடைந்தனா்.
குருவரெட்டியூரில் செயல்படும் தனியாா் பள்ளிக்கு 9 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனம் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. அம்மாபேட்டையைச் சோ்ந்த ஓட்டுநா் குணசேகரன் (38) வாகனத்தை ஓட்டிச் சென்றாா். அம்மாபேட்டை கால்நடை மருத்துவமனை பிரிவு சாலையில் சென்றபோது, எதிா்பாராமல் சாலையோர பள்ளத்தில் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், வேனில் பயணம் செய்த 7 போ் லேசான காயமடைந்தனா். பொதுமக்கள் மாணவ, மாணவியரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவ்விபத்து குறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.