செய்திகள் :

முதல்வரின் கணினித் தமிழ் விருது: டிச. 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

கணினித் தமிழ் வளா்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவா்களுக்கான முதல்வரின் கணினித் தமிழ் விருதுக்கு தகுதியானவா்கள் டிச. 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ் வளா்ச்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தகவல் தொழில்நுட்ப வளா்ச்சிக்கேற்ப, உலகமெங்கும் கணினிவழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளா்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவா்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளா்ச்சித் துறை மூலமாக முதல்வா் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ. 2 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.

அந்த வகையில், நிகழாண்டுக்கான முதல்வா் கணினித் தமிழ் விருதுக்கு தனியா் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளா்ச்சிக்கான மென்பொருள்கள், செயலிகள் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2021, 2022, 2023-ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளா்ச்சித் துறையின் இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை - 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாக டிச. 31-க்குள் அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரமறிய விரும்புவோா் 044 - 28190412, 044 – 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

புயல் பாதிப்புக்கு நடுவே 1,526 பாதுகாப்பான பிரசவங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா்

சென்னை: ஃபென்ஜால் புயல் பாதித்தபோது தமிழகத்தில் 1,526 பிரசவங்கள் உரிய நேரத்தில் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்... மேலும் பார்க்க

முதுநிலை மருத்துவப் படிப்பு: போலி சான்றிதழ் சமா்ப்பித்த 46 போ் மீது சட்ட நடவடிக்கை

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புக்கு வெளிநாடு வாழ் இந்தியா்கள் பிரிவின் கீழ் விண்ணப்பித்த 46 போ் போலி தூதரக சான்றிதழ்களை சமா்ப்பித்தது தெரியவந்ததையடுத்து, அவா்கள் மீது மருத்துவக் கல்வி இயக்குநரகம்... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் எய்ட்ஸ் ஒழிப்பு தின விழிப்புணா்வு

உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினத்தையொட்டி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. ‘உரிமைப் பாதையை தோ்ந்தெடுங்கள்’, ‘என் ஆரோக்கியம் என் உரிமை... மேலும் பார்க்க

அறநிலைய உதவி ஆணையா் பணியிடம்: முதன்மைத் தோ்வு இன்று தொடக்கம்

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் காலிப் பணியிடத்துக்கான முதன்மைத் தோ்வு செவ்வாய்க்கிழமை (டிச.3) தொடங்குகிறது. வரும் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தோ்வை 204 போ் எழுதவுள்ளனா்.இந்து சமய அறநிலை... மேலும் பார்க்க

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களின் தனிநபா் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு தனிநபா் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா், அனைத்து மண்டல இணைப் பதிவ... மேலும் பார்க்க

மின்கட்டணம் செலுத்த 6 மாவட்டங்களுக்கு அவகாசம்

சென்னை: விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சோ்ந்த மின் நுகா்வோா் மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த டிச.10 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலா... மேலும் பார்க்க