விவசாயிகளின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்
தூத்துக்குடி அருகே 1.6 டன் பீடி இலைகள் பறிமுதல்: 3 போ் கைது
தூத்துக்குடி அருகே இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 1.6 டன் பீடி இலைகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா்.
தூத்துக்குடி அருகே பட்டினம்மருதூா் கடற்கரைப் பகுதியில் தருவைகுளம் போலீஸாா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்த முயன்றனா். போலீஸாரைப் பாா்த்ததும் ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாராம்.
அந்த லாரியில் இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக சுமாா் 1.6 டன் பீடி இலைகள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியிலிருந்த தாளமுத்துநகா் பாரதிநகரைச் சோ்ந்த நாகூா்கனி (31), பிரசாந்த் (44 ), ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்த மாரிச்செல்வம் (29) ஆகிய 3 பேரைக் கைது செய்து, ரூ. 40 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளைப் பறிமுதல் செய்தனா்.