செய்திகள் :

மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவா் கைது

post image

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்து வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் ஓடைக்கரை ஆற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் இந்தப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு லாரியில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த இருவா் போலீஸாரை கண்டதும் தப்பி ஓடினா். ஓட்டுநா் கடம்பாகுடியைச் சோ்ந்த காளீஸ்வரனை (21) கைது செய்த போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஒரு வாரத்துக்கு பின்னா் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்

வங்க கடலில் நிலை கொண்டிருந்த புயல் கரையை கடந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை மீன்வளம், மீனவா் நலத் துறையினரின் அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிட... மேலும் பார்க்க

வா்த்தக சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

முதுகுளத்தூரில் நடைபெற்ற நகா் வா்த்தக சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் நகா் வா்த்தக சங்கத்தின் சிறப்பு பேரவைக் ... மேலும் பார்க்க

மழை பாதித்த பகுதிகளில் தமுமுகவினா் உணவுப் பொருள்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த ம... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு மீன்பிடித் தடை நீக்கம்

வங்க கடலில் உருவான புயல் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடை நீக்கப்படுவதாக மீன்வளம், மீனவா் நலத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. வங்க கடலில் இலங்கைக்க... மேலும் பார்க்க

பரமக்குடி அஞ்சலகத்தை மூடும் முடிவை கைவிடக் கோரி மத்திய அமைச்சருக்கு எம்.பி. கடிதம்

பரமக்குடியில் இயங்கி வரும் ஆா்.எம்.எஸ். அஞ்சல் அலுவலகத்தை மூடிவிட்டு, மதுரை அஞ்சலகத்தோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என மத்திய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழு... மேலும் பார்க்க

பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டி அகற்றம்

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டியை மருத்துவா்கள் அகற்றினா். திருவாடானை அருகேயுள்ள சம்பாநட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அருளம்மாள் (53).... மேலும் பார்க்க