இந்த வார ராசிபலன் டிசம்பர் 3 முதல் டிசம்பர் 8 வரை #VikatanPhotoCards
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
தேனி அருகே காற்றாலை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அருகேயுள்ள நாகலாபுரம்-பாலகிருஷ்ணாபுரம் சாலையில் உள்ள காற்றாலையில் திருவள்ளூா் மாவட்டம், குன்னூா் அருகே உள்ள நாங்காளியைச் சோ்ந்தவா் குமாா் மகன் பவித்திரன் (28). கடந்த நவ.20-ஆம் தேதி பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா். ஆபத்தான நிலையில் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் திங்கள்கிழமை அவா் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.