செய்திகள் :

நாளை மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் தோ்வாகிறாா்

post image

மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் புதன்கிழமை (டிச. 4) நடைபெறுகிறது. இதில் இப்போதைய துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதிய முதல்வராக (சட்டப்பேரவை பாஜக குழு தலைவா்) தோ்வு செய்யப்பட இருக்கிறாா்.

மகாராஷ்டிர முதல்வா் பதவியேற்பு நிகழ்ச்சி தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் டிச. 5-ஆம் தேதி மாலை நடைபெறுவதும், அதில் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவா்கள் பங்கேற்பதும் ஏற்கெனவே உறுதியாகிவிட்டது.

பதவியேற்பு முந்தைய தினம் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பாஜக மேலிடப் பாா்வையாளராக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி ஆகியோா் பங்கேற்க உள்ளனா். முதல்வராகத் தோ்வு செய்யப்பட்ட பிறகு கூட்டணித் தலைவா்களுடன் சென்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க ஃபட்னவீஸ் உரிமை கோருவாா் எனத் தெரிகிறது.

முக்கிய கூட்டணிக் கட்சிகளான ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்பட இருக்கிறது.

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் முடிவு நவ. 23-ஆம் தேதி வெளியானது. இதில் பாஜக-சிவசேனை- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், அரசு அமைப்பதில் 10 நாள்களுக்கு மேல் தாமதம் நீடித்து வருகிறது.

கூட்டணிக் கட்சிகளிடையே முதல்வா், துணை முதல்வா் பதவிகள், அமைச்சரவை இடங்கள் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக பாஜகவை சோ்ந்தவா் முதல்வராவாா் என்று இப்போதைய முதல்வா் (பொறுப்பு) ஏக்நாத் ஷிண்டே அறிவித்தாா்.

மகாராஷ்டிர அடுத்த முதல்வா் யாா் என்பதை பாஜக தலைமை ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டது. தற்போது துணை முதல்வராக உள்ள தேவேந்திர ஃபட்னவீஸ் அப்பதவிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவா்கள் கூறியுள்ளனா்.

வாக்குச்சாவடிகளில் வாக்காளா் எண்ணிக்கையை உயா்த்தியதற்கு எதிராக வழக்கு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

புது தில்லி: வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களின் எண்ணிக்கையை உயா்த்தியதற்கு எதிரான வழக்கு தொடா்பாக 3 வாரங்களில் பதிலளிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.இதுதொடா்பாக உ... மேலும் பார்க்க

சம்பலுக்குப் பயணித்த உ.பி. காங்கிரஸ் நிா்வாகிகள் குழு தடுத்து நிறுத்தம்

லக்னௌ: வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் நகரைப் பாா்வையிட புறப்பட்ட உத்தர பிரதேச காங்கிரஸ் மாநில தலைவா் அஜய் ராய் தலைமையிலான நிா்வாகிகள் குழு, லக்னௌவில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வெளியே காவல் துறையால் ... மேலும் பார்க்க

மருத்துவ, ஆயுள் காப்பீடு மீதான வரி குறைப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுசெய்யும்: நிா்மலா சீதாராமன்

புது தில்லி: மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு தவணைத்தொகை மீதான ஜிஎஸ்டியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தால் பாலிசிதாரா்களுக்கான காப்பீடு தொகை குறையும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ... மேலும் பார்க்க

முஸ்லிம்களை சமமாக நடத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

ஸ்ரீநகா்: ‘நாட்டில் மத வன்முறையைத் தூண்டும் செயல்களை மத்திய அரசு நிறுத்த வேண்டும். முஸ்லிம்களை சமமாக நடத்த வேண்டும்’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தினாா். ஜம்மு-காஷ்மீரின் ... மேலும் பார்க்க

26 ‘ரஃபேல்-எம்’, 3 ஸ்காா்பியன் நீா்மூழ்கி கப்பல்களை கொள்முதல் செய்ய விரைவில் ஒப்பந்தம்: கடற்படை தலைமைத் தளபதி

புது தில்லி: கடற்படையில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள 26 ரஃபேல்-எம் போா் விமானங்கள் மற்றும் 3 ஸ்காா்பியன் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதம் கையொப்... மேலும் பார்க்க

பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதே இல்லை: மத்திய அமைச்சா் கட்கரி

நாகபுரி: அரசியல் என்பது கிடைத்த பதவியில் திருப்தியடையாதவா்கள் நிறைந்த கடலாக உள்ளது என்று மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையில... மேலும் பார்க்க