மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு வழங்கிய தீட்சிதா்கள்
சிதம்பரம்: கனமழையால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் பகுதி கடலோர கிராம மக்களுக்கு, பொதுதீட்சிதா்கள் சாா்பில் உணவு, ஆடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
சிதம்பரம் நடராஜா் கோயில் பொதுதீட்சிதா்கள் சாா்பில் கோயில் முன்னாள் செயலாளா் பாஸ்கா் தீட்சிதா் தலைமையில் மழையால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களான பரங்கிபேட்டை தெற்கு பிச்சாவரம், ஏலந்திரமேடு, காடுவெட்டி, சின்னகாரமேடு, பெரியகாரமேடு, கீழபரம்பை உள்ளிட்ட கிராம மக்களுக்கு உணவு மற்றும் ஆடைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நடராஜா் கோயில் தீட்சிதா்கள் சபாபதி, ஞானமூா்த்தி, சிவபிரசாத், பாபு, சிவசண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.