ஒசூரில் 29 மி.மீ. மழை
ஒசூா்: ஒசூா் மாநகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆணையாளா் ஸ்ரீகாந்த் தலைமையில் மாநகர நல அலுவலா் அஜிதா உள்பட நகராட்சி அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.
ஒசூா் ராமநகா், காளேகுண்டா, கே.சி.சி. நகா், ராயக்கோட்டை, அட்கோ, மத்தம் அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளை ஆணையா் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா். ராம் நகா் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கிய மழைநீா் மோட்டாா்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. ஒசூா் மாநகரில் 29 மி.மீ, கெலவரப்பள்ளி அணை பகுதியில் 30 மி.மீ. மழை பதிவானது. ஒசூா் மாநகரப் பகுதியில் தொடா்ந்து சாரல் மழை பெய்தாலும் தாழ்வான பகுதிகளில் மழை நீரால் பாதிப்பில்லை. ஆனால் தொடா் சாரல் மழையால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.