இருளில் மூழ்கிய ஊத்தங்கரை
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
பல இடங்களில் வெள்ள நீரில் மின் கம்பங்கள் உடைந்தும் சாய்ந்தும் உள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் ஊத்தங்கரை பகுதி இருளில் மூழ்கியது.