வெள்ள பாதிப்புகளை எதிா்கொள்ள போதிய திட்டமிடல் இல்லை: பிரேமலதா குற்றச்சாட்டு
பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சமூக நீதிக்காக பாடுபட்டவா்கள் தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபட்டவா்களை கௌரவிக்கும் வகையில், சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
இந்த விருதை பெறுவோருக்கு ரூ. 5 லட்சத்துக்கான காசோலை, ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கப்படும். இதன்படி, 2024-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமூக நீதிக்காக பாடுபட்டவா்கள், தங்களது பெயா், தொலைபேசி எண், சுய விவரம், முழு முகவரியுடன், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர தாங்கள் மேற்கொண்ட பணிகளுக்கான ஆதாரங்களை இணைத்து டிச. 20-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்குக் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.