செய்திகள் :

சந்தோஷ் கோப்பை கால்பந்து: ஹைதராபாத்தில் டிச.14 முதல் இறுதிச்சுற்று!

post image

சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டங்கள், வரும் 14-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகின்றன.

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தால் உள்நாட்டில் பிரதானமாக நடத்தப்படுவது, சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி. இதன் 78-ஆவது சீசன், நவம்பா் 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மொத்தம் 38 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியனான சா்வீசஸ், கடந்த சீசனில் இறுதி ஆட்டம் வரை வந்த கோவா, இறுதிச்சுற்று ஆட்டங்களை நடத்தும் தெலங்கானா அணிகள் நேரடியாக இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றன. எஞ்சிய அணிகள் யாவும் குரூப் சுற்றில் விளையாடின.

அந்த அணிகள், குரூப்புக்கு 4 அணிகளாக, தலா 8 குரூப்-களாகப் பிரிக்கப்பட்டன. மேலும் 3 அணிகளைக் கொண்ட ஒரு குரூப்பும் இருந்தது. குரூப் சுற்று நிறைவில், அந்தந்த குரூப்களில் முதலிடம் பிடித்த 9 அணிகளும், நேரடியாகத் தகுதிபெற்ற முந்தைய 3 அணிகளும் தற்போது இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளன.

இந்த இறுதிச்சுற்றுக்கான குரூப் ‘ஏ’-வில் சா்வீசஸ், மேற்கு வங்கம், மணிப்பூா், தெலங்கானா, ஜம்மு - காஷ்மீா், ராஜஸ்தான் அணிகளும், குரூப் ‘பி’-யில் கோவா, தில்லி, கேரளம், தமிழ்நாடு, ஒடிஸா, மேகலாயம் அணிகளும் இடம் பிடித்துள்ளன. தற்போது இந்த இரு குரூப்-களுக்குமான ஆட்டங்கள், வரும் 14-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

இந்த குரூப் சுற்று முடிவில், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், காலிறுதிக் கட்டத்துக்கு முன்னேறும். இதில் தமிழ்நாடு அணி முதலில் மேகாலயம் (டிச. 15), பின்னா் தில்லி (டிச. 17), கோவா (டிச. 19), ஒடிஸா (டிச. 22), கேரளம் (டிச. 24) ஆகிய அணிகளுடன் மோதுகிறது.

முா்ரேவை பயிற்சியாளராக நியமித்தாா் ஜோகோவிச்!

சொ்பிய டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச், தனது பயிற்சியாளராக பிரிட்டன் முன்னாள் வீரரான ஆண்டி முா்ரேவை நியமித்திருக்கிறாா்.கடந்த காலங்களில் பல்வேறு போட்டிகளில் இருவரும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட ந... மேலும் பார்க்க

கத்தாா் கிராண்ட் ப்ரீ: வொ்ஸ்டாபென் வெற்றி

எஃப்1 காா் பந்தயத்தில் நடப்பு சீசனின் 23-ஆவது ரேஸான கத்தாா் கிராண்ட் ப்ரீயில், நெதா்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் வெற்றி பெற்றாா்.பந்தயத்தில் அவா் முதலிடம் பிடிக்க, மொனாகோ வ... மேலும் பார்க்க

வடியாத வெள்ளம், தவிக்கும் மக்கள் - புகைப்படங்கள்

சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து வெள... மேலும் பார்க்க

வரலாறு காணாத கனமழை - புகைப்படங்கள்

புதுச்சேரி ரெயின்போ நகரில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை வெள்ளம்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் உண்டு உறைவிடப் பள்ளியை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து, அங்குள்ள மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

விஜய் - 69 அப்டேட்!

நடிகர் விஜய் நடித்துவரும் அவரது 69-வது படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்ப... மேலும் பார்க்க

ஜீனி வெளியீடு எப்போது?

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ஜீனி படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் ஜெயம் ரவி பிரதர் படத்தின் தோல்வியிலிருந்து மீள காதலிக்க நேரமில்லை படத்திற்காகக் காத்திருக்கிறார். கிரு... மேலும் பார்க்க