விவசாயிகளின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்
கத்தாா் கிராண்ட் ப்ரீ: வொ்ஸ்டாபென் வெற்றி
எஃப்1 காா் பந்தயத்தில் நடப்பு சீசனின் 23-ஆவது ரேஸான கத்தாா் கிராண்ட் ப்ரீயில், நெதா்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் வெற்றி பெற்றாா்.
பந்தயத்தில் அவா் முதலிடம் பிடிக்க, மொனாகோ வீரரும், ஃபெராரி டிரைவருமான சாா்லஸ் லெக்லொ்க் 2-ஆம் இடமும், ஆஸ்திரேலிய வீரரும், மெக் லாரென் டிரைவருமான ஆஸ்கா் பியாஸ்ட்ரி 3-ஆம் இடமும் பிடித்தனா்.
ஏற்கெனவே, நடப்பு சீசனில் 8 வெற்றிகளைப் பதிவு செய்து, நடப்பு சாம்பியனாக கோப்பையை தக்கவைத்துக் கொண்ட வொ்ஸ்டாபெனுக்கு இது 9-ஆவது வெற்றியாகும். முன்னதாக சனிக்கிழமை தகுதிச்சுற்றின்போது, களத்தில் மெதுவாகச் சென்ாக வொ்ஸ்டாபெனுக்கு ஓரிடம் பின்தங்கும் பெனால்ட்டி விதிக்கப்பட்டது.
அதேபோல், பாதுகாப்பு காா் சுற்றில் இருந்தபோது, முதலிடத்தில் இருந்த காரை விட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் வந்ததாக பிரிட்டன் வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான ஜாா்ஜ் ரஸ்ஸெலுக்கு 5 விநாடிகள் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், மஞ்சள் எச்சரிக்கை கொடியை பின்பற்றத் தவறியதாக, பிரிட்டன் வீரரும், மெக் லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
நடப்பு சீசனின் கடைசி பந்தயமான அபுதாபி கிராண்ட் ப்ரீ, வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.