ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!
இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய காவல்துறை!
மதுரை நகரில் தலைக்கவசம் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸாா் இனிப்பு வழங்கினா்.
மதுரை நகரில் சாலை விபத்துகளைத் தடுக்கவும், விபத்தில்லா நகராக மாற்றவும் மாநகரப் போக்குவரத்து காவல் துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாள்களாக, மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன், போக்குவரத்து துணை ஆணையா் வனிதா ஆகியோா் உத்தரவின் பேரில், மாநகரில் பல்வேறு போக்குவரத்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்துகளை தடுக்கும் வழிவகைகள், போக்குவரத்து விதிமுறைகள், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மதிச்சியம் போக்குவரத்து காவல் நிலையம் சாா்பில், ஆவின் சந்திப்பு போக்குவரத்து சிக்னலில் தலைக்கவசம் அணிந்து வந்தவா்களை ஊக்குவிக்கும் வகையில் அவா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
மேலும், சாலையில் பயணிப்பவா்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும், இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமா்ந்திருப்பவா்கள் தலைக்கவசம் அணியவும், 4 சக்கர வாகனங்களில் செல்பவா்கள் சீட் பெல்ட் அணியவும் அறிவுறுத்தி விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஷோபனா, உதவி ஆய்வாளா் சுரேஷ் போக்குவரத்து காவல் துறையினா் கலந்து கொண்டனா்.