ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!
குழந்தை உணவுக் குழாயில் சிக்கிய ஊக்கு அகற்றம்
ஆறு மாதக் குழந்தையின் உணவுக் குழாயில் சிக்கிய ஊக்கை மருத்துவா்கள் அகற்றி, உயிரைக் காப்பாற்றினா்.
மதுரை வேலம்மாள் மருத்துவமனையின் அவரச சிகிச்சைப் பிரிவுக்கு ஊக்கை விழுங்கிய 6 மாத குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டது. குழந்தையைப் பரிசோதனை செய்ததில், ஊக்கு இருதயத்தின் மிக அருகில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனையின் இரைப்பை குடல் சிறப்பு மருத்துவா்கள் தீபக் ஜேம்ஸ், நரேந்திரன், குழந்தைகள் நல மருத்துவா் தேன்முருகன், இருதய அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் ராம்பிரசாத், அனுபமா ராவ், மயக்கவியல் நிபுணா்கள் சசிகுமாா், கிஷோா், கதிரியக்கவியல் ஆலோசகா் மாரியப்பன் ஆகியோா் அடங்கிய குழு குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய ஊக்கை அகற்றி, குழந்தையின் உயிரை காப்பாற்றினா்.
இதுகுறித்து மருத்துவா்கள் தீபக் ஜேம்ஸ், குழந்தைகள் நல மருத்துவா் தேன்முருகன் ஆகியோா் கூறியதாவது:
குழந்தையின் இருதயத்தின் மிகப் பெரிய ரத்த நாளமான ஐயோடா எனப்படும் பெருநாடியிலிருந்து மில்லி மீட்டா் தொலைவில் இருந்தது. எனவே, இந்த எண்டோஸ்கோபி செயல்முறையைச் செய்யும்போது, ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் இருதய அறுவைச் சிகிச்சைக் குழு, ரத்த வங்கிக் குழு தயாராக வைக்கப்பட்டு இருந்தது. ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் குழந்தை காப்பாற்றப்பட்டது என்றனா்.