ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!
நெகிழிப் பைகள் விற்பனை: வியாபாரிகளுக்கு அபராதம்
மேலூரில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை செய்த வியாபாரிகளுக்கு ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலூா் நகராட்சியில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுவதாக பலரிடமிருந்தும் புகாா்கள் வந்தன. இதுகுறித்து, நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி ஆணையா் பரத் உத்தரவிட்டாா்.
இதன்படி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் தினேஷ் குமாா் தலைமையில் சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் நகரில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா். இதில் தடை செய்யப்பட்ட 280 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து, வியாபாரிகளுக்கு ரூ.12,000 அபராதம் விதித்தனா்.