ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!
ஆட்டோ ஓட்டுருக்கு விதித்த அபராதத் தொகை குறைப்பு
ஆட்டோ ஓட்டுநருக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட அபராதத் தொகையை குறைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாலமுருகன் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரம் மாவட்டம், ஆவாரேந்தல் பரனூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் எருதுகட்டு விழாவுக்கு அனுமதி வழங்கி, போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, எருது கட்டும் விழாவுக்கு அனுமதி வழங்க மறுத்து, மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதைத்தொடா்ந்து, மனுதாரா் மற்றொரு வழக்குரைஞா் மூலம் மீண்டும் மனு தாக்கல் செய்தாா். இதை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் இந்த மனுவை தாக்கல் செய்ததாகக் கூறி, மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
மனுதாரா் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை குறைக்கக் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ஒரு லட்சம் ரூபாயை அவா் செலுத்த முடியாத நிலையில் உள்ளாா். எனவே, இந்த அபராதத் தொகையை குறைக்க வேண்டும் என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 ஆயிரமாக குறைக்கப்படுகிறது. இந்தத் தொகையை மனுதாரா் 2 வாரங்களில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சட்ட உதவி மையத்தில் செலுத்த வேண்டும் என்றனா் நீதிபதிகள்.