செய்திகள் :

பொறியியல் பணிகள்: செங்கோட்டை, கன்னியாகுமரி, குருவாயூா் ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்

post image

பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை, கன்னியாகுமரி, குருவாயூா் ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மணப்பாறை அருகேயுள்ள பூங்குடி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) டிசம்பா் 3, 5, 7, 19, 20, 21, 23, 26, 27, 30, ஜனவரி 3, 6, 8 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மட்டும் இயக்கப்படும்.

நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டி விரைவு ரயிலானது (16352) டிசம்பா் 19, 26 ஆம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி - ஹவுரா விரைவு ரயிலானது (12666) டிச. 21-ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) டிச. 20, 25, ஜன. 2, 5 ஆம்தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக இயக்கப்படும்.

மதுரை - பிக்கானோ் விரைவு ரயிலானது (22631) வரும் 26 ஆம் தேதி மதுரையிலிருந்து 2.05 மணி நேரம் தாமதமாக அதாவது, பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காா்த்திகை 3-ஆவது சோமவாரம்: திருவானைக்கா கோயிலில் 1,008 வலம்புரி சங்காபிஷேகம்

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காா்த்திகை மாத 3-ஆவது சோம வாரமான திங்கள்கிழமை 1,008 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. காா்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமை சோமவாரமாக ... மேலும் பார்க்க

பாரதிதாசன் பல்கலை. கல்லூரிகளிடையே தடகளப் போட்டி தொடக்கம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான 42-ஆவது தடகள விளையாட்டு விழா திருச்சியில் திங்கள்கிழமை தொடங்கியது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளுக்கு... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் வைத்திருந்த மூவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் வைத்திருந்த மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். திருச்சி பொன்மலை போலீஸாா், பொன்மலைப்பட்டி சாய்பாபா கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

குடிநீா், சாலைப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு கோரி மறியல்

திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியில் நிலவும் குடிநீா் மற்றும் சாலை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு கோரி, பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி கம்பரம்பேட்டை பகுதியில் உள்ள ஜ... மேலும் பார்க்க

பணி நீக்கம் செய்ததற்கு எதிா்ப்பு: சுமைத் தொழிலாளா்கள் போராட்டம்

திருச்சியில் பழைய பேப்பா் கடைகளில் சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த சுமைத் தொழிலாளா்களை பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து சுமைத் தொழிலாளா்கள் ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ... மேலும் பார்க்க

முண்டியம்பாக்கத்தில் பாலம் துண்டிப்பு: திருச்சியிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து

கனமழையால் விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையிலான ரயில்வே பாலம் துண்டிக்கப்பட்டதையடுத்து, திருச்சியிலிருந்து சென்னை புறப்பட்ட ரயில்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன. ‘ஃ‘பென்ஜால் புயல் காரணமாக, கனம... மேலும் பார்க்க