பாகிஸ்தானில் பிறந்தநாளை கொண்டாடிய தாவூத்இப்ராகிம்... விழாவில் இந்திய தொழிலதிபர்க...
மன்மோகன் சிங் காலமானார்!
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92.
1991 - 96 வரை முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான ஆட்சியில், நிதித் துறை அமைச்சராக செயல்பட்டார். கல்வியாலும், நிதித் துறை நிர்வாக அனுபவத்தாலும் பொருளாதாரவியல் வல்லுநரான மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.
2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார்.