மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெள்ளிக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானார்.
தில்லி இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிக்க : மன்மோகன் சிங் உடலுக்கு மோடி அஞ்சலி!
இந்த நிலையில், மன்மோகன் சிங் இல்லத்துக்கு நேரில் வருகைதந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.