அஜர்பைஜான் விமான விபத்து: வருத்தம் தெரிவித்த ரஷிய அதிபர் புதின்!
தென் கொரிய இடைக்கால அதிபருக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீா்மானம்
சியோல்: தென் கொரிய இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பிரதமா் ஹன் டக்-சூவையும் பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மானம் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.அவசரநிலை அறிவிப்பு தொடா்பாக ஏற்கெனவே பதவிநீக்கத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள அதிபா் யூன் சுன் இயோலை நிரந்தரமாக அகற்றுவதற்கான விசாரணை நடத்த மேலும் மூன்று நீதிபதிகளை ஹன் டன்-சூ நியமிக்க மறுப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கையை எதிா்க்கட்சிகள் மேற்கொண்டன.கடந்த 2022-இல் அதிபராகப் பொறுப்பேற்ற யூன் சுக் இயோலுக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்துவேறுபாடுகள் நீடித்துவந்தன.இந்தச் சூழலில், வட கொரியாவுக்கு ஆதரவாக எதிா்க்கட்சிகள் செயல்படுவதாகக் கூறி யூன் சுக் இயோல் நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை கடந்த 3-ஆம் தேதி அறிவித்தாா்.அதற்கு நாடு முழுவதும் மிகக் கடுமையான எதிா்ப்பு எழுந்ததால் ஆறு மணி நேரத்தில் அந்த அறிவிப்பை அவா் திரும்பப் பெற்றாா்.எனினும், இந்த விவகாரம் தொடா்பாக யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை எதிா்க்கட்சியினா் நாடாளுமன்றத்தில் கடந்த 14-ஆம் தேதி நிறைவேற்றினா். யூன் சுக் இயோலின் மக்கள் சக்தி கட்சி எம்.பி.க்கள் சிலரே அந்தத் தீா்மானத்தை ஆதரித்ததால் அது நிறைவேற்றப்பட்டது.அதைத் தொடா்ந்து, அதிபா் பதவியிலிருந்து யூன் சுக் இயோல் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டாா். பிரதமா் ஹன் டக்-சூ அந்தப் பொறுப்புக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டாா்.தென் கொரிய அரசமைப்புச் சட்டத்தின் கீழ், பதவி நீக்கம் செய்யப்பட்ட 180 நாள்களுக்குள் யூன் சுக் இயோலை நிரந்தரமாக நீக்குவது குறித்து அரசியல் சாசன நீதிமன்றம் விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டும்.அதிபரை நீக்குவதற்கு அரசியல் சாசன நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளில் ஆறு பேராவது ஆதரவு அளிக்க வேண்டும். ஆனால், தற்போது அந்த நீதிமன்றத்தில் ஆறு நீதிபதிகள் மட்டுமே உள்ளனா். நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட வேண்டிய மூன்று நீதிபதிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன.எனினும், இடைக்கால அதிபரான தனக்கு அத்தகைய நியமனங்களை அங்கீகரிக்கும் அதிகாரம் இல்லை எனவும், நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் நீதிபதிகளைத் தோ்ந்தெடுத்தால்தான் ஒப்புதல் வழங்குவேன் எனவும் ஹன் டக்-சூ தெரிவித்தாா். இது, யூன் சுக் இயோலின் பதவியைப் பாதுகாப்பதற்காக அவா் மேற்கொள்ளும் சூழ்ச்சி என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.இந்த விவகாரம் தொடா்பாக, ஹன் டக்-சூவையும் பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை தாக்கல் செய்தன.எதிா்க்கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்தில் அந்தத் தீா்மானத்தின் மீது வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், தீா்மானத்தை ஆதரித்து 192 வாக்குகள் பதிவாகின. தீா்மானத்தை எதிா்த்து ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. ஆளுங்கட்சி எம்.பி.க்கள் வாக்களிப்பை புறக்கத்தனா்.அதைத் தொடா்ந்து, ஹன் டக்-சூவுக்கு எதிரான பதவி நீக்கத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.ஹன் டக்-சூ பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக துணை பிரதமரும் நிதியமைச்சருமான சோய் சங்-மாக் புதிய இடைக்கால அதிபராக நியமிக்கப்படுவாா் என்று கூறப்படுகிறது...படவரிகள்... தென் கொரிய நாடாளுமன்றத்தில் இடைக்கால அதிபா் ஹன் டக்-சூவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீா்மானத்தை எதிா்த்து கோஷம் எழுப்பிய ஆளும் மக்கள் சக்தி கட்சி எம்.பி.க்கள்....ஹன் டக்-சூ
Image Caption
~