மன்மோகன் சிங் நினைவிடம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு
சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவனை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
ஆறு நாள் பயணமாக கடந்த டிசம்பா் 24-ஆம் தேதி அமெரிக்கா சென்ற மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பைடன் நிா்வாகத்தின் பிற உயா் அதிகாரிகளைச் சந்திக்க திட்டமிட்டுள்ளாா்.
இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவனை வெள்ளை மாளிகையில் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இது தொடா்பாக ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையின் முன்னேற்றம் குறித்து நாங்கள் விவாதித்தோம். தற்போதைய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்த இருதரப்பு கருத்துக்களை நாங்கள் பகிா்ந்து கொண்டோம்’ என தெரிவித்தாா்.
அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் நிா்வாகத்தின் மூத்த அதிகாரிகளையும் இந்த பயணத்தின்போது ஜெய்சங்கா் சந்திப்பாா் என தெரிவிக்கப்பட்டது.