Indigo Airlines: தொழில் நுட்ப கோளாறு... மும்பை விமான நிலையத்தில் பயணிகள் 16 மணி ...
மகா கும்பமேளா: ட்ரோன் கண்காட்சிக்கு ஏற்பாடு!
வரும் 2025-ஆம் ஆண்டு மகா கும்பமேளா நடைபெறவிருப்பதை முன்னிட்டு, உத்தரப் பிரதேசத் சுற்றுலா சங்கம் பகுதியில் ட்ரோன் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா பிரயாக்ராஜில் 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெறுகிறது. உலகிலேயே மிகப்பெரிய மத வழிபாடான மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதுமிருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மத மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைப் படம்பிடிக்கும் வகையில் ட்ரோன் கண்காட்சியை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த கண்காட்சியின்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பறக்கவிட உள்ளதாக மாநில அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டின், பிரயாக்ராஜ், ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் ஆகிய நான்கு நகரங்களின் ஆற்றுப்படுகைகளில் இந்த கும்பமேளா விழாவானது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இதில், உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா மிகவும் பிரசித்தி பெற்றது.
திரிவேணி சங்கமம் என்பது கங்கை, யமுனை மற்றும் கண்ணுக்குப் புலப்படாத சரஸ்வதி நதியும் ஒன்றுகூடும் இடமாகும்.
2025ஆம் ஆண்டு சங்கமம் நகரில் மகா கும்பமேளா நடைபெறவிருப்பதை முன்னிட்டு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவுப்படி, நகரை அழகாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்காக ரூ.6,800 கோடியை உ.பி. அரசு ஒதுக்கியிருக்கிறது. கடந்த 2019 மகா கும்பமேளாவில் 24 கோடி பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். வரும் 2025 மகா கும்பமேளாவுக்கு 40 கோடி பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.