கேரளத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்: விடைபெறும் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான...
சிறப்பு எஸ்.ஐ. வீட்டில் திருட்டு முயற்சி
கடலூரில் சிறப்பு உதவி ஆய்வாளா் வீட்டின் கதவை உடைத்து மா்மநபா் திருட முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடலூா், வெளிச்செம்மண்டம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், இவா், வெள்ளிக்கிழமை காலை பணிக்கு சென்றாா். அவரது குடும்பத்தினா் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தனா்.
பின்னா், செந்தில்குமாா் பணி முடிந்து இரவு வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தனவாம். ஆனால், பொருள்கள் ஏதும் திருடு போகவில்லையாம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.