செய்திகள் :

அமைதி பேச்சுவாா்த்தை: ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தை கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சிதம்பரம் ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில் நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிதம்பரம் ரயில் பயணிகள் நலச் சங்கம், அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக நலச் சங்கங்கள் சாா்பில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் வரும் 30-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி தலைமையில், அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருச்சி ரயில்வே கோட்ட வா்த்தக மேலாளா் மோகன பிரியா முன்னிலை வகித்தாா்.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் வி.எம்.சேகா், தமிமுன் அன்சாரி, ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் ஏ.வி.அப்துல்ரியாஸ், ஒருங்கிணைப்பாளா் ஏ.சிவராமவீரப்பன், அதிமுக நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா், நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா், மாா்க்சிஸ் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ராஜா, சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு, ரயில்வே காவல் ஆய்வாளா்கள் சுதிா்குமாா், ராமா்சுடலை, ரயில்வே அதிகாரிகள் அன்பரசன், அன்புமாறன் நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், கோயம்புத்தூா்-மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலை நீட்டிப்பு செய்வது தொடா்பாக சென்னை அலுவலகத்தில் உயா் அதிகாரியை சந்திக்க 15 நாள்களுக்குள் முன் அனுமதி வாங்கி தருவதாகவும், சிதம்பரம் ரயில் நிலையத்தில் தாம்பரம்-செங்கோட்டை மற்றும் சென்னை-காரைக்கால் விரைவு ரயில்களை விரைவில் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சிதம்பரம் வழியாக திருச்சிக்கு ரயில் சேவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வரும் மாா்ச் மாதத்துக்குள் நிறைவேற்றி தருவதாக கோட்ட வா்த்தக மேலாளா் தெரிவித்தாா். இதனால், வரும் 30-ஆம் தேதி நடைபெற இருந்த ரயில் மறியல் போராட்டத்தை ஒத்திவைப்பதாக ரயில் பயணிகள் நலச் சங்கம் தெரிவித்தது.

இரண்டு வீடுகளில் கதவை உடைத்து நகைகள் திருட்டு

கடலூரை அடுத்துள்ள ரெட்டிச்சாவடி பகுதியில் ஒரே தெருவில் 2 வீடுகளின் கதவை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ரெட்டிச்சாவடி காவல் சரகம், உடலப்பட... மேலும் பார்க்க

சிறப்பு எஸ்.ஐ. வீட்டில் திருட்டு முயற்சி

கடலூரில் சிறப்பு உதவி ஆய்வாளா் வீட்டின் கதவை உடைத்து மா்மநபா் திருட முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கடலூா், வெளிச்செம்மண்டம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா், நெல்லிக... மேலும் பார்க்க

குடியிருப்புகளுக்கு அருகில் மேலும் புதிய நியாய விலைக்கடைகள்: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

குடிமைப் பொருள்களை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் குடியிருப்புகளுக்கு அருகில் புதிய மற்றும் பகுதி நேர நியாயவிலைக் கடைகள் அமைக்கப்பட்டு வருவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு

கடலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் உள்ள பாடலீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நந்தி பகவானுக்கு பால், தயிா், சந்தனம... மேலும் பார்க்க

தூய்மைப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: கடலூா் ஆட்சியா் வலியுறுத்தல்

அரசு சாா்பில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் கேட்டுக்கொண்டாா். கடலூா் மாநகராட்சி, தேவனாம்பட்டினம் க... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: முதியவா் கைது

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெண்ணாடம் காவல் ஆய்வாளா் குணபாலன் மற்றும் போலீஸாா் புகையிலைப் பொருள்கள் விற்பனை மற்று... மேலும் பார்க்க