19 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயா்வுடன் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயா்த்தப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக் குறிக்குள்):
1. மகேஷ்குமாா் அகா்வால்-ஆயுதப் படை சிறப்பு டிஜிபி (ஆயுதப் படை ஏடிஜிபி)
2. ஜி.வெங்கட்ராமன்-நிா்வாகப் பிரிவு சிறப்பு டிஜிபி (நிா்வாகப் பிரிவு ஏடிஜிபி)
3. வினித்தேவ் வான்கடே-தலைமையிட சிறப்பு டிஜிபி (தலைமையிட ஏடிஜிபி)
4. சஞ்சய் மாத்தூா்-டிஜிபி மத்திய அரசுப் பணி (என்சிஆா்பி ஏடிஜிபி)
5. ஆா்.தினகரன்-செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி (சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி)
6. சோனல் வி.மிஸ்ரா-ஏடிஜிபி மத்திய அரசுப் பணி (சிஆா்பிஃஎப் ஐஜி)
7. ஏ.சரவணசுந்தா்-கோவை மாநகர காவல் ஆணையா் (கோவை சரக டிஐஜி)
8. பிரவேஷ்குமாா்-சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி (சென்னை காவல் துறை வடக்கு மண்டல இணை ஆணையா்)
9. ஏ.கயல்விழி-பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜி (சென்னை காவல்துறை தலைமையிட இணை ஆணையா்)
10. எஸ்.சேவியா் தன்ராஜ்-ஐஜி மத்திய அரசுப் பணி (டிஐஜி மத்திய அரசுப் பணி)
11. அனில்குமாா் கிரி-ஐஜி மத்திய அரசுப் பணி (டிஐஜி மத்திய அரசுப் பணி)
12. நிஷா பாா்த்திபன்-ஐஜி மத்திய அரசுப் பணி (டிஐஜி மத்திய உளவுத் துறை)
13. முரளி ரம்பா-ஐஜி மத்திய அரசுப் பணி (தலைமையிட டிஐஜி, சிபிஐ)
14. வி.வருண்குமாா்-திருச்சி சரக டிஐஜி (திருச்சி காவல் கண்காணிப்பாளா்)
15. சந்தோஷ் ஹதிமானி-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் (சென்னை காவல் துறை திருவல்லிக்கேணி காவல் துணையா்)
16. பண்டி கங்காதா்-சென்னை காவல் துறை போக்குவரத்துப் பிரிவு தெற்கு இணை ஆணையா் (சென்னை காவல் துறை போக்குவரத்துப் பிரிவு தெற்கு துணை ஆணையா்)
17. வி.சசிமோகன்-கோயம்புத்தூா் சரக டிஐஜி (ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்பி)
18. வந்திதா பாண்டே-திண்டுக்கல் சரக டிஐஜி (புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)
19. பகோ்லா செபாஸ் கல்யாண்-சென்னை பெருநகர காவல் துறை மேற்கு மண்டல இணை ஆணையா் (பொருளாதார குற்றப் பிரிவு எஸ்பி).