வினிசியஸுக்கு ரெட் கார்டு..!கடைசி நேரத்தில் ரியல் மாட்ரிட் த்ரில் வெற்றி!
அரசுக்கு எதிரான கருத்துப் பதிவு: காவலா் பணியிடை நீக்கம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக கருத்து பதிவு செய்ததாக வேலூா் கிராமிய காவல் நிலைய முதல் நிலை காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
வேலூா் கிராமிய காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவா் அன்பரசன். இவா் தனது முகநூல் பக்கத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடா்பாக திமுக அரசுக்கு எதிரான கருத்து பதிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தனது கருத்தைப் பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின்பேரில், மாவட்டக் காவல் துறையினா் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து அன்பரசனை பணியிடை நீக்கம் செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் உத்தரவிட்டுள்ளாா்.