எச்எம்பிவி வைரஸ் இந்தியாவுக்கு புதிதல்ல.. ஏற்கனவே இருக்கும் வைரஸ்தான்!
ரிஷப் பந்த்தின் முதல் இன்னிங்ஸ்தான் ஆச்சரியமளித்தது: ஆஸி. தலைமைப் பயிற்சியாளர்
ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடியது தனக்கு ஆச்சரியளிக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 4 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையும் படிக்க: 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!
எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை
4 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 33 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்த நிலையில், ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடியது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனவும், முதல் இன்னிங்ஸில் அவர் பொறுமையாக விளையாடியதே தனக்கு மிகவும் ஆச்சரியமளித்ததாக ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: அதிவேகமாக அரைசதம்..! ரிஷப் பந்த் புதிய சாதனை!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த் விளையாடிய விதம் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. உண்மையில், அவர் முதல் இன்னிங்ஸில் மிகவும் பொறுமையாக விளையாடியதே எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் திறன் ரிஷப் பந்த்துக்கு இருக்கிறது என்றார்.
இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி அதிவேகமாக அரைசதம் அடித்த ரிஷப் பந்த், முதல் இன்னிங்ஸில் 98 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.