செய்திகள் :

TVK Vijay : `ஆளுநர் யாராக இருந்தாலும்..!' - சட்டமன்ற சர்ச்சை குறித்து விஜய் கூறுவதென்ன?

post image

இன்று, 2025ம் ஆண்டுக்கான முதல் தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

இதேப்போல கடந்த ஆண்டும் ஆளுநர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. இன்று ஆளுநர், உரையை வாசிக்காமல் வெளியேறிய பிறகு, "அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்" என ஆளுநர் மாளிகை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆளுநர் மற்றும் திமுக அரசு என இரு தரப்புகளிலும் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

TVK| Vijay - விஜய் - தவெக

அவரது பதிவில், "தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.

ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்." என குறிப்பிட்டுள்ளார் விஜய்.

"சுயநல தலைவர்களால் கம்யூனிசம் நீர்த்துப்போய்விட்டது"- ஆ.ராசா பேச்சுக்கு கம்யூனிஸ்ட் எதிர்வினையென்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெ. சண்முகம், ``போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை அரசியல் சாசனத்தில் உள்ளவை. அந்த அடிப்பட... மேலும் பார்க்க

IT RAID; டெல்லி Twist - அண்ணாமலை, எடப்பாடி இருவருக்கும் செக் வைக்கும் BJP தலைமை? | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - கவர்னர் ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க* - டங்ஸ்டன் விவகாரம்... விவசாயிகள் பேரணி!* - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம்... மேலும் பார்க்க

Anbumani: "பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?" - தமிழக காவல்துறைக்கு அன்புமணி கண்டனம்

பா.ம.க போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறை, தி.மு.க போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன்? ஆட்சியாளர்கள் என்றால் வானத்திலிருந்து குதித்தவர்களா? என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெர... மேலும் பார்க்க

'திமுக கூட்டணி வெலலெத்து போயுள்ளது' - தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் காவல்துறை அனுமதி் வழங்குகிறது. அதுவே மற்ற கட்... மேலும் பார்க்க

ஆங்காங்கே தென்படும் அறிகுறிகள்... மீண்டும் உருவாகிறதா அதிமுக - பாஜக கூட்டணி?!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உருவானது அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி. இந்த கூட்டணி தேர்தலில் வெற்றியை தேடி தரவில்லையென்றாலும், மத்தியில் இருந்து ஆதிக்கம் அதிகமாக இருந்தால்தான், அ.தி.மு.க-வுக்க... மேலும் பார்க்க