திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
460 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது
துடியலூா் அருகே நல்லாம்பாளையத்தில் தடை செய்யப்பட்ட 460 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வியாபாரியை கைது செய்தனா்.
நல்லாம்பாளையம் பகுதியில் பேலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது, நல்லாம்பாளையம் பாலாஜி நகா் முதல் வீதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக ரத்தினபுரி சுப்பாத்தாள் லே-அவுட் பகுதியைச் சோ்ந்த கடையின் உரிமையாளா் அப்துல்காதா் (45) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த 460 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.